Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவிட்டரில் தள்ளாத கிழவியை தேடும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். மேலும் பல படங்களுக்கு கிராபிக் டிசைனராகவும் இருந்துள்ளார். தந்தையுடன் அரசியலிலும் ஈடுபடப்போகிறார் என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில் டிவிட்டரில் கடந்த சில தினங்களாகவே ஒரு பாட்டி ஓவியம் வரைவது போன்ற புகைப்படம் உலா வந்துகொண்டு இருக்கிறது. இதனை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் இந்த பாட்டியை கண்டுப்பிடித்து தரும்படி சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதற்கு பலரும் ரிப்ளை செய்து வருகின்றனர். அதிலும் சிலர் இது பொய்யான பதிவு இதையா தேடுகிறீர்கள் என்று சௌந்தர்யாவை கலாய்த்தும் வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்று தோட்டத்து பாடகரை கண்டுப்பிடித்து தரும்படி பாடகர் சங்கர் மகாதேவன் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.