Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி

விஜய் சேதுபதியை வைத்து பீட்சா, காதலும் கடந்து போகும் போன்ற ஹிட் படங்களை தந்தவர் தான் இயக்குனர் நலன் குமாரசாமி. இவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

அடுத்ததாக இவர் ஒரு படத்தை எடுக்காமல் வெப் சீரிஸை எடுக்க உள்ளாராம். இது 10 எபிசோட்களாக வரும் இதில் கல்யாணத்திற்கு பிறகு ஆண்ணிற்கும் பெண்ணிற்கும் இடையே ஏற்படும் காதல், காமம், அதை தாண்டி நடக்கும் பிரச்சனைகள் என அவருக்கே உரிய ஸ்டைலில் இருக்குமாம்.

இந்த வெப் சீரிஸை பற்றி நலன், ’ நாம் கல்யாணம் என்றால் ஒருநாள் கூத்து, கல்யாண கலாட்டா போன்று காமெடியாக இருக்கும் என நினைபோம், ஆனால் கல்யாணம் என்பது மிக சீரியஸான விஷயம், அதனால் தான் 10 எபிசோட்கள் ஆகின்றன’ என மேலும் பல கருத்துகளை கூறியுள்ளார்.

இதனை பற்றிய முழு விவரம் கூடிய விரைவில் அறிவிக்கப்படுமாம்.