Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் வருவேன்: மனிஷா கொய்ராலா

சினிமாவில் மீண்டும் நடிப்பேன் என்று அறிவிப்பு விடுத்துள்ளார் மனிஷா கொய்ராலா.
பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

இந்நிலையில் இவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளிநாட்டில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற இவர் தற்போது உடல் நிலை குணமாகி இந்தியா திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தனது நடிப்பு குறித்து பேட்டி அளித்த இவர், மீண்டும் சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. கதை கேட்டு பிடித்து இருந்தால் நடிப்பேன்.

மேலும் நான் படங்கள் தயாரிக்க போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை.என்றும் மூன்று வருடங்களுக்கு பட தயாரிப்பில் ஈடுபட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இப்போது என் வாழ்க்கை முறை அடியோடு மாறிவிட்டது. வாழ்க்கை முறையை மாற்றி கொள்வதன் மூலம் நோய்களில் இருந்து மீள முடியும் என்ற புத்தகம் எழுத திட்டமிட்டு உள்ளேன். முன்பெல்லாம் பார்ட்டிக்கு போவது உண்டு, இப்போது முற்றிலும் மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.