Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உத்தம வில்லனை குழப்பும் பார்வதிகள்

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் உத்தம வில்லன்.

இந்த படத்தில் மரியான், பூ போன்ற படங்களில் நடித்த பார்வதி மேனன் கமல் ஜோடியாக நடிக்கிறார். அதேபோல் பார்வதி நாயர் என்ற மற்றொரு மல்லுவுட் நடிகையும் இதில் நடிக்கிறார்.

இந்த இரண்டு பார்வதிகளால் ஷுட்டிங்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி பார்வதி நாயர் கூறுகையில், உத்தம வில்லன் படத்தில் பார்வதி மேனன் என்பவர் நடித்து வருகிறார். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஷுட்டிங் இருக்கும் போது குழப்பம் ஏற்படுகிறது.

பார்வதி மேனன் என்று அழைப்பதற்கு பதில் பார்வதி நாயர் என்று கூப்பிடுவார்கள். ஸ்பாட்டுக்கு போனால் என்னை அழைக்கவில்லை என்று தெரியவரும்.

இந்த குழப்பத்தை தீர்க்க இயக்குனர் ரமேஷ் அரவிந்த் ஒரு வழி கண்டுபிடித்தார். நாயர் என்று அழைத்தால் நான் செல்வேன், மேனன் என்று அழைத்தால் அந்த பார்வதி செல்வார்.

என்ன ஒரு கண்டுபிடிப்புடா சாமி!!!!!!!!!!!!

கேரள ரசிகர்களை ஏமாத்த முடியாது- நிஷா அகர்வால்!