Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ஸ்ரீகாந்த் தயாரிக்கும் சாமியாட்டம் படம்

தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்று வணிக ரீதியாக வசூல் செய்த படம் சுவாமி ரா ரா. இப்படத்தை தமிழில் சாமியாட்டம் என்ற பெயரில் நடிகர் ஸ்ரீகாந்த் தயாரிக்கிறார்.

இலகுவான கதை, மிருதுவான காட்சிகள், வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என ஜாலி வேடிக்கை கொண்ட படம்தான் சாமியாட்டம்.

தனுஷை வைத்து யாரடி மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் இப்புதிய படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக மும்பை பெண் ஒருவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் முக்கியமாக பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களும் நடிக்கிறார்.

குறுகிய காலகட்டத்தில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு பாண்டிச்சேரி செல்ல படக்குழுவினர் தயாராகவுள்ளனர்.

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பாலியல் தொந்தரவு! விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்!