Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருட்டு வி.சி.டியில் படம் பார்க்கிறீர்களா, அப்போ என் அக்கவுண்டுக்கு பணம் போடுங்க - ஜோக்கர் பட தயாரிப்பாளர்

இப்போதெல்லாம் சினிமாவில் படம் தயாரிப்பதை விட மிகவும் கடினமான ஒரு விஷயம் திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பது தான்.

இந்நிலையில் ஜோக்கர் பட தயாரிப்பாளர் ஒரு புது முயற்சியை கையாண்டுள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தோழர்களே திருட்டு விசிடியில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின் - சுரண்டலின் இன்னொரு அங்கம்தான். ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை.

சில வருட உழைப்பு இதையும் தாண்டி, திருட்டி விசிடியில் படம் பார்க்கும் தோழர்கள், அதற்கான நியாயமான தொகையை கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள் என்று தனது வங்கி எண்ணையும் பதிவு செய்துள்ளார்.