Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் வசூலில் கலக்கிய, சொதப்பிய படங்கள் ஒரு பார்வை, தற்போது வரை என்ன நிலவரம்- முழு விவரம்

2016 முடிய இன்னும் 2 மாதங்களே உள்ளது. அதற்குள் 150 படங்களுக்கு மேல் வந்துவிட்டது, வழக்கம் போலவே இந்த வருடமும் ஹிட் ஆன படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அந்த வகையில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்று பார்க்கையில்...

கபாலி- ரூ 350 கோடி(இது மட்டுமே அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது).

தெறி- ரூ 150 கோடி

இருமுகன்- ரூ 105 கோடி(பெங்களூரில் ரிலிஸாகவில்லை)

24- ரூ 103 கோடி(தமிழகத்தில் பெரிதும் லாபம் இல்லை)

ரெமோ- ரூ 80 கோடி(இன்னும் தெலுங்கில் ரிலிஸாகவில்லை)

ஆகிய படங்கள் தற்போது வரை வசூலில் டாப்-5 இடத்தில் உள்ளது, இன்னும் சிங்கம்-3, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வருவதால் இதில் மாற்றம் ஏற்படலாம்.

மேலும், இது மட்டுமின்றி பிச்சைக்காரன், இறுதிச்சுற்று, சேதுபதி, தர்மதுரை, தேவி, தில்லுக்கு துட்டு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மனிதன், ரஜினி முருகன் ஆகிய படங்கள் நல்ல ஹிட் அடித்துள்ளது.

மிருதன், காதலும் கடந்து போகும், ஆண்டவன் கட்டளை, இது நம்ம ஆளு, அரண்மனை-2 ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது.

தீபாவளிக்கு வந்த கொடி, காஷ்மோராவில் கொடி ஏற்கனவே லாபம் தரும் படமாகிவிட்டது, காஷ்மோரா கொஞ்சம் தடுமாறி வருகிறது.

இதில் தாரை தப்பட்டை, கெத்து, கதகளி, போக்கிரி ராஜா, புகழ், றெக்க, தொடரி, நாயகி, வாய்மை, கிடாரி, வாகா, திருநாள், இறைவி போன்ற படங்கள் தோல்வியடைந்துள்ளது.

மேலும் அம்மா கணக்கு, மெட்ரோ, அப்பா, ஜோக்கர், குற்றமே தண்டனை ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஜோக்கர் கொஞ்சம் லாபத்தையும் கொடுத்தது.