Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணியில் முதலில் நடிக்கவிருந்தது விஜயகாந்த் தான், இந்த செய்தி தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற படம் ராஜா ராணி. இப்படத்தின் வெற்றியே அட்லீக்கு தொடர்ந்து இரண்டு விஜய் படங்களை பெற்றுக்கொடுத்தது.

ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜயகாந்த் தானாம், என்ன சொல்றீங்க? என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது.

ஆனால், இந்த ராஜா ராணி இல்லை, 90களில் விஜயகாந்த், விஜயசாந்தி ஆகிய இருவரும் ஆக்‌ஷனில் கலக்கி வந்தனர்.

இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்து ராஜா ராணி என்று ஒரு படத்தை தொடங்கினார்கள்.

என்ன ஆனது என்று தெரியவில்லை, ஒரு சில நாட்களிலேயே அந்த படம் ட்ராப் ஆகியது, அதன் பிறகு இந்த ஜோடி இணையவே இல்லை.

இணையத்தில் பிரபலமானவை

Comments