Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆவணங்களை திருடிய விஷால் மற்றும் குழு- போலீஸில் புகார்

நடிகர் சங்கத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் விஷால்.

தற்போது சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், கதிரேசன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர் பிரபு உள்பட 11 தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் பாபுகணேஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

அதில் அவர், தமிழ்த் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஆவணங்களை 11 பேர் திருடியுள்ளனர். இதனால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments