Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவர் தான் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்- மேடையிலேயே கூறிய ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் விரைவில் மகளிர் மட்டும் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.

இதில் சூர்யா, கார்த்தி, சிவகுமார் என பலரும் கலந்துக்கொண்டனர், இதில் ஜோதிகா பேசுகையில் ‘இயக்குனர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுக்கோள்.

எப்போதும் ஹீரோக்களுக்காக மட்டுமே படம் எடுக்கின்றீர்கள், ஹீரோயின்களுக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுங்கள்.

மேலும், இப்படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகைகளும் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுக்கு பொருத்தமானவர் சரண்யா பொன்வன்னன் அவர்கள் தான், அவர் பல திறமைகளை கொண்டவர்’ என புகழ்ந்து தள்ளினார்.