Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரகாஷ்ராஜுக்கு எதற்கு விருது- தமிழக சினிமா விருது குறித்து கோபத்தில் கருத்துக்களை வெளியிட்ட பிரபல இயக்குனர்

தமிழக சினிமா விருது நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2009-ம் ஆண்டிற்கான விருது பிரகாஷ் ராஜிற்கு வில்லு படத்திற்காக கொடுத்தனர்.

ஆனால், அதே ஆண்டு அங்காடிதெரு படத்தில் ஏ.வெங்கடேஷின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.

தன் வில்லத்தனத்தால் மிரட்டியிருப்பார், அவருக்கு விருது கொடுக்காதது பலருக்கும் வருத்தம் தான்.

இதுக்குறித்து வெங்கடேஷும் ” 'வில்லு' படத்தில் எந்த அடிப்படையில் பிரகாஷ்ராஜ்க்கு 'வில்லன்' விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

'அங்காடித் தெரு' படத்தில் நடித்த எனக்கு சிறந்த குணசித்திர விருதாவது கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? 'அங்காடித் தெரு' படத்தில் நடிகர் மகேஷுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருதாவது கிடைத்திருக்க வேண்டும். அதுவும் கிடைக்கவில்லை" என்று கேட்டுள்ளார்.