Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை பாக்ஸ் ஆபிஸ் கொடுத்த ஷாக், எந்த படம் எத்தனையாவது இடம் தெரியுமா?

GST அமலுக்கு வந்ததில் இருந்து திரையரங்க டிக்கெட்டுகள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜெமினிகணேஷனும் சுருளிராஜனும், பண்டிகை, திரி, ரூபாய் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதனுடன் WAR FOR THE PLANET OF THE APES என்ற ஹாலிவுட் படமும் திரைக்கு வந்தது.

இதில் திரி ரூ. 6 லட்சம், ரூபாய் படம் ரூ 11 லட்சம் முறையே வசூல் செய்தது. ஆனால், WAR FOR THE PLANET OF THE APES ரூ 65 லட்சம் வரை வசூல் செய்து அசத்தியுள்ளது.

ஜெமினிகணேஷனும் சுருளிராஜனும் ரூ 68 லட்சம் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. பண்டிகை ரூ 33 லட்சம் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் ஜெமினிகணேஷனும் சுருளிராஜனும் முதலிடத்தில் இருக்க, WAR FOR THE PLANET OF THE APES இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் படங்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி ஹாலிவுட் படங்கள் வசூல் அதிகமாவது பலருக்கும் அதிர்ச்சி தான்

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments