Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சங்கமித்ரா துவங்காததற்கு உண்மையான காரணத்தை கூறிய குஸ்பு

சுந்தர்.சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதை தொடர்ந்து படப்பிடிப்பு பற்றிய எந்த அறிகுறியும் இல்லாமால் இருந்தது. ஸ்ருதி ஹாசனுக்கு பதில் ஹன்சிகா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு பற்றிய அறிவிப்பு இதுவரை வரவில்லை.

இந்த தாமதம் ஏன் என நடிகை குஷ்பு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். "சரியான பிளான் இல்லாமல் இந்த படத்தை துவங்கமுடியாது, ஷூட்டிங் செய்வது 30% வேலை மட்டுமே, மீதி 70% பணிகள் ஷூட்டிங் துவங்கும் முன்பே செய்யவேண்டியது, அதனால் தான் இந்த தாமதம்" என குஸ்பு விளக்கியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

"ஸ்கிரிப்ட் தயாராகவில்லை என சிலர் தவறாக சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பே அதற்கான பணிகள் துவங்கியது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை" எனவும் அவர் கூறியுள்ளார்.

தெரு நாய்கள் திரை விமர்சனம்
Comments