Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளிக்கு எந்த படம் பார்க்கப்போறீங்க? ஒரு பார்வை

சினிமாவில் பண்டிகை என்றாலே ஒரு துடிப்பு இருக்கும். அன்றைய ஜாம்வான்கள் தியாகராஜ பாகவதர் முதல் இப்போதிருக்கும் அஜித், விஜய் என பல நடிகர்களின் படங்கள் இதுபோன்ற முக்கிய நாளில் சரித்திர சாதனை படைத்ததுண்டு.

இந்த வருட தீபாவளிக்கு 3 நடிகர்களின் படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இதில் இளையதளபதி விஜய் நடிக்கும் மெர்சல், விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், கௌதம் கார்த்திக் நடிக்கும் ஹர ஹர மஹா தேவகி என முக்கிய படங்கள் தயாராகி வருகிறது. இதில் என்னென்ன படங்கள் எந்த வகை என பார்க்கலாம்.

மெர்சல்

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அட்லீ இயக்கத்தில் விஜயின் 2 வது படம். இவர் படத்தில் காமெடிக்கு குறைவிருக்காது. விஜய்யும் சில இடங்களில் நகைச்சுவையுடன் பேசுவார். மூன்று கெட்டப்களில் இவர் நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா என மூன்று பேர் டூயட் பாடுகின்றனர்.

ரஹ்மான் இசை, வடிவேலுவின் காமெடி, கூடுதலாக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு என படத்தில் இருப்பது இன்னும் சிறப்பு. ஆக்‌ஷன், டான்ஸ் ரசிகர்களை திருப்திபடுத்தும். ஏற்கனவே டீசர், பாடல் என டாப் கியர் தான்.

ஸ்கெட்ச்

விக்ரம் படம் வந்தாலே அது ஒரு தனி ரகம் தான். படங்களை மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் தனது படத்தை பற்றி எல்லோரும் பேசும் படி செய்துவிடுவார். விகரமின் ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சூரி, ராதா ரவி, வேல ராமமூர்த்தி இருக்கிறார்கள் என்றால் கதையில் சம்திங் ஸ்பெஷல். வட சென்னையை மைய்யமாக வைத்து இயக்குனர் விஜய் சந்தர் இயக்கி வரும் இப்படத்தில் தமன்னா விக்ரமுடன் ஜோடி போடுகிறார். குறி வைத்து கூட்டத்தை தன் பக்கம் இழுக்கும் விக்ரம் இந்த முறை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிடுவார் போல. தமன் இசை படத்தை முழுமைப்படுத்துமா?

ஹர ஹர மஹா தேவகி

இந்த பெயரை இளைஞர்கள் மறக்கமாட்டார்கள். சொன்னதும் உடனே முகத்தில் ஒரு சிரிப்பு. எதற்காக சிரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.

அந்த வகையில் ஒரு அடல்ட் காமெடி படமாக சந்தோஷ் ஜெயக்குமார் இயக்குகிறார். சமீபமாக ரசிகர்களிடம் இடம் பிடித்து வரும் கௌதம் கார்த்திக் நிலையாக நின்றுவிடுவார் என டீசர் சொல்லிவிட்டது.

முழுக்க முழுக்க காமெடி ஆக்‌ஷன் தான். ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, பால சரவணன், கருணாகரன் என பெரிய காமெடி கூட்டம் இதில் ஐக்கியமாகியுள்ளது.

வந்தவர்கள் ஹர ஹர மஹா தேவகி என பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் இந்த தீபாவளி ட்ரிபில் ஃபிளேவர்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments