Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளை விஜய் சேதுபதியின் புரியாத புதிர்! ஒரு பார்வை

விஜய் சேதுபதி என்றால் அவரின் நடிப்பு தனி அடையாளம் என்பதை படம் அழகாக காட்டும். தொடர்ச்சியாக படங்களை கொடுத்து வரும் அவர் மக்கள் செல்வன் என்ற பெயரையும் பெற்றுவிட்டார்.

இவரின் நடிப்பில் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட புரியாத புதிர் நாளை வெளியாக இருக்கிறது. உணர்வுகள் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. ட்ரைலர் ஏற்கனவே அவரின் பல உணர்வுகளை காண்பித்தது.

கதிர் என்ற கதாபாத்திரத்தில் சேதுபதி, ஒரு இசை கலைஞராக நடித்திருக்கிறார். மீரா என்னும் வீணை கலைஞரான காயத்திரியுடன் அவர் ரொமான்ஸ் செய்வதை ஸ்னீக் வீடியோவில் பார்த்திருப்பீர்கள்.

இசையை பற்றிய படமல்ல. இருவருக்கும் இருக்கும் உறவை சொல்லும் கதை தான் புரியாத புதிர். இக்கதையின் முக்கிய விசயம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் ஒன்றாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி.

புரியாத புதிர் அனைவரையும் திருப்திபடுத்தும் என்ற நம்பிக்கையுள்ளது.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments