Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் எந்தெந்த ஏரியாவில் வெற்றி, தோல்வி- முழு லிஸ்ட் இதோ

அஜித் நடிப்பில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்ற படம் விவேகம். ஆனால், இப்படத்தின் வசூல் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் விவேகம் வெளிவந்து 3 வாரங்கள் ஆகிவிட்டது, பல ஏரியாவில் இப்படத்தின் நிலை என்ன என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்து ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.

மேலும் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் இப்படம் ஏற்கனவே ஹிட் வரிசைக்கு வந்துவிட்டதாக அந்த பகுதி திரையரங்குக உரியமையாளர்களே கூறியுள்ளனர்.

மற்ற பகுதிகளில் படம் எந்த நிலையில் உள்ளது என்று இன்னும் சரியான தகவல் தெரியவில்லை, மதுரையில் கூடிய விரைவில் ஹிட் வரிசைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வெளிமாநிலங்கள் பொறுத்தவரை கர்நாடகாவில் இப்படம் ஹிட் என்று அறிவித்துவிட்டனர், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் ரூ 8 கோடி வரை வசூல் செய்து போட்ட பணத்திற்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என கூறியுள்ளனர்.

கேரளாவில் அஜித் படங்களிலேயே மிகப்பெரும் தோல்வியாக விவேகம் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது, வெளிநாடுகள் பொறுத்துவரை ப்ரான்ஸில் படம் சூப்பர் ஹிட் என விநியோகஸ்தரே தெரிவித்துவிட்டார்.

அமெரிக்காவில் படம் சுமாரான வசூல் தான் என்றாலும் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக வசூல் விவேகம் தான்.

இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா, UK போன்ற நாடுகளில் ரூ 1 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது, இதில் ஆஸ்திரேலியாவில் முதலுக்கு மோசமில்லை, UK-வில் நஷ்டம் வரலாம் என கூறுகின்றனர்.

மலேசியாவில் தற்போது ஆல்டைம் டாப் 10 வசூலுக்குள் விவேகம் வந்துள்ளது, ஸ்ரீலங்காவில் பாகுபலி-2விற்கு பிறகு அதிக வசூல் என் விநியோகஸ்தர் தரப்பே கூறிவிட்டது.

சிங்கப்பூர், UAE ஆகிய நாடுகளிலும் ஓரளவிற்கு நல்ல வசூல் தான் வந்துள்ளதாகவும், விரைவில் என்ன நிலை என்று அறிவிக்கவுள்ளனர், ஆனால், தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் வசூலை வெளியே கூறாமல் பலரும் மௌனம் சாதித்து வருகின்றனர்.

தெரு நாய்கள் திரை விமர்சனம்
Comments