Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ

அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், அஜித் தற்போது சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கின்றார்.

பலரும் விஷ்ணுவர்தன், சிவா தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர்களாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஷங்கர் முதல்வன் 2 எடுக்கவுள்ளார், அதற்காக அஜித்தை சந்தித்து கதை கூறியுள்ளார், ஏ.எம்.ரத்னம் அப்படத்தை தயாரிக்கவுள்ளார் என்று தான் செய்திகள் கிளம்பியது.

ஆனால், இதுக்குறித்து விசாரிக்கையில் ‘அஜித் தற்போது முழு ஓய்வில் தான் இருக்கின்றாராம், ஷங்கர் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலையில் பிஸியாகவுள்ளார், இவர்கள் தற்போதைக்கு சந்திக்க வாய்ப்பே இல்லை’ என தெரிய வந்துள்ளது.

மேலும், அப்படி இந்த செய்தி உண்மை என்றாலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவர ஜனவரிக்கு மேல் ஆகுமாம்.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்
Comments