Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அது மட்டும் நிற்கக்கூடாது, வலியை கூட பொறுத்துக்கொண்ட விஷால்

விஷால் காலில் சக்கரம் கட்டி தான் தற்போது வேலைப்பார்த்து வருகின்றார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க வேலைகளில் பிஸியாக இருக்கும் இவர் நேரம் கிடைக்கும் போது துப்பறிவாளன் ப்ரோமோஷனிலும் பங்கேற்கின்றார்.

இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் மட்டும் 26 நாட்கள் படமாக்கப்பட்டதாம், அதுவும் அடர்ந்த காட்டில் எடுக்கப்பட்டதாம்.

மேலும், விஷால், வினய் மோதிக்கொள்ளும் இந்த சண்டைக்காட்சியின் போது இருவருக்குமே கை, கால் என அடிப்பட்டு எழும்பு முறிவு வரை ஏற்பட்டுள்ளது.

ஆனால், படப்பிடிப்பு நிற்கக்கூடாது என்பதற்காக இருவருமே அதை வெளியே சொல்லாமல், பொறுத்துக்கொண்டு அந்த காட்சிகளை நடித்துக்கொடுத்தார்களாம்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளிவரவிருக்கின்றது, ஏற்கனவே ட்ரைலர் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த படம் எப்படியிருக்கும் என்பதை நாளை பார்ப்போம்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments