Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆளப்போறான் தெலுங்கன் பாடல் வருமா? அட்லீ கூறிய பதில்

மெர்சல் படத்தில் தமிழரின் பெருமையை கூறும் ஆளப்போறன் தமிழன் என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அந்த பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் ஹிட்.

இந்நிலையில் மெர்சல் தெலுங்கு பதிப்பில் "ஆளப்போறான் தெலுங்கன்" என்ற பாடல் வரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

இதுபற்றி இயக்குனர் அட்லீ ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார். "ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழனுக்கான தேசிய கீதமாக முடிவு செய்துள்ளோம். அதை எப்படித் தெலுங்குல மாற்ற முடியும்? தெலுங்கு மக்களின் பெருமையைச் சொல்லும் நேரடி தெலுங்கு படத்தில்தான் அந்த வரி சாத்தியம்."

"தெலுங்கில் ஒரு குழந்தைக்கான வாழ்த்துப் பாடலாக மட்டுமே அது வரும். இவன் பிறந்துவிட்டான். இங்கே இவன் ஜெயிப்பான் எனப் பொதுவாகத்தான் எழுதப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments