Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த முறை சிட்டியை இதற்காக தான் உருவாக்குவார்களா? ஷங்கர் காக்கும் ரகசியம் இதுவா!

ஷங்கர் இயக்கத்தில் ரூ 400 கோடி செலவில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் மேக்கிங் காட்சிகள் எல்லாம் அனைவரையும் அசர வைத்தது.

தற்போது இப்படத்தின் கதை இதுவாக இருக்கும் என ஒரு சில தகவல்கள் கசிந்துள்ளது, படத்தின் டைட்டிலுக்கு கீழ், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் கண்டிப்பாக ஏதோ ஒரு சக்தி மனிதர்களை எதிர்ப்பது போல் தான் கதை இருக்கும் என்பது தெளிவாகின்றது, இதில் நிறைய பறவைகளை பயன்படுத்தியுள்ளார்களாம்.

மேலும், மனிதர்கள் பூமியை தாண்டி மாசுக்களை பரப்பி வருவதால், ஒரு சில வேற்று கிரகவாசிகள் கூட பூமியை அழிக்க வரலாம், அதை முறியடிக்க மீண்டும் வசீகரன் சிட்டியை உருவாக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதெல்லாம் இணையத்தில் சுற்றும் வெறும் கதைகள் தான், உண்மை என்ன என்பதை நாம் திரையில் பார்த்தால் தான் தெரியும்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments