Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டைட்டில் பிரச்சனை முடிந்து மற்றொரு பிரச்சனையில் மெர்சல்

விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. ஏற்கனவே கேளிக்கை வரி ரத்து செய்வார்களா? படம் சொன்ன தேதியில் வருமா? என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.

தேனாண்டாள் நிறுவனம் கண்டிப்பாக மெர்சல் தீபாவளிக்கு வரும் என்று கூறிவிட்டனர், மேலும், டைட்டில் பிரச்சனை கூட தீர்ந்து படம் எதிர்ப்பார்த்தப்படி வரும் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.

தற்போது மெர்சல் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால், மீண்டும் ஏதும் பஞ்சாயத்து தொடங்குமா? என்று விஜய் ரசிகர்களே சோகத்தில் உள்ளனர்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments