Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக புகழ் பெற்ற தியேட்டரில் மெர்சல் இப்போதே ஹவுஸ் ஃபுல்! மேலும் ஒரு காட்சி

விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் வெளியாக இன்னும் 5 நாட்கள் தான் இருக்கின்றன. ஏற்கனவே இணையதளத்தில் சாதனை செய்துள்ள இப்படம் உலகம் முழுக்க 3000 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

மேலும் ஐரோப்பிய நாட்டின் மிகப்பெரிய திரையரங்கமான தி காரண்ட் ரெக்ஸிலும் இப்படம் வெளியாவதாக தகவல் வெளியானது. கபாலி, பாகுபலிக்கு பின் மெர்சல் என்ற பெருமையும் உள்ளது.

இப்படத்திற்கு அக்டோபர் 18, 19 ம் தேதிகளில் சிறப்பு காட்சிகள் என அங்கு அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்பதிவுகள் உடனே முடிந்து விட்டதால் தற்போது 17 ம் தேதி நள்ளிரவு 11.55 க்கு ஒரு சிறப்புக்காட்சியை கூடுதலாக சேர்த்துள்ளார்களாம்.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விரைவில் தற்போது விற்றுவிட்டதாம். முன்பதிவும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெர்சல் திரை விமர்சனம்
Comments