Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணம் முடிந்து சமந்தாவின் முதல் ரிலீஸ்! நாளைய ஸ்பெஷல்

நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் காதலாகி, திருமணம் அரங்கேற்றமும் இனிதே நடந்து முடிந்து விட்டது. நிகழ்வின் அழகான புகைப்படங்களை நமது தளத்திலும் வெளியிட்டிருந்தோம்.

திருமணம் முடிந்ததும் நான் தொடர்ந்து நடிப்பேன் என கூறினார். இதனை தொடர்ந்து அவரின் நடிப்பில் நாளை ஒரு படம் தெலுங்கில் வெளியாகிறது. இதில் நாகார்ஜுனா மெண்டலிஸ்ட்டாக நடித்துள்ளார்.

சமந்தாவும் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். வெளிவந்துள்ள ஒரு சில புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இதில் அவர் வழக்கறிஞராக நடித்துள்ளாராம்.

மேலும் கதைப்படி அவர் ஒரு கட்டத்தில் ஆவியாக மாறிவிடுவாராம். Raju Gari Gadhi 2 என்ற இப்படத்தில் சுற்றுலாக்காக ஐ லாண்ட் தீவுகளுக்கு செல்லும் போது அங்கே நடக்கும் அமானுஷ்யம் தான் இக்கதையாம்.

Comments