Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் அடுத்தப்படத்திற்கு அட்லீ எடுக்கும் கதை? மெர்சல் கிளைமேக்ஸ்- பலதகவல்கள் இதோ

விஜய் மெர்சல் ரிலிஸிற்கு பிறகு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படமும் முடிந்து அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது.

அதை நிரூபிக்கும் பொருட்டு அட்லீயும் ஆளப்போறான் தமிழன் டைட்டிலை பதியவுள்ளேன் என்றார், மேலும், பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்கவும் தான் விரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி தெறி படத்தில் இரண்டாம் பாகம் எடுப்பது போல் தான் முடித்தேன், அதேபோல் தான் மெர்சல் கிளைமேக்ஸும் இருக்கும்.

கூட்டணி நன்றாக அமைந்தால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று அட்லீ கூறியுள்ளார்.

மெர்சலில் மருத்துவ உலகில் நிகழும் போலிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கதை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments