Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது மொட்டை ராஜேந்திரனும் இப்படியா?

நான் கடவுள் படத்தின் மூலம் பயங்கரமான வில்லனாக களம் இறங்கியவர் மொட்டை ராஜேந்திரன். ஆனால், அதை தொடர்ந்து வெறும் காமெடி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகின்றார்.

அது ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெறுகின்றது, அதன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகின்றது, ஒரு கட்டத்திற்கு மேல் சென்றால் எந்த ஒரு காமெடி நடிகருக்கும் ஹீரோவாக வேண்டும் என்று ஒரு விருப்பம் இருக்கும்.

அந்த வகையில் மொட்டை ராஜேந்திரனும் மோகனா என்ற படத்தின் மூலம் சோலோ ஹீரோவாகிவிட்டார், இதில் இவருக்கு ஜோடியாக கல்யாணி நாயர் நடிக்கின்றார்.

தற்போது வரை சூரி மட்டுமே சோலோ ஹீரோவாக எந்த ஒரு படத்திலும் நடிக்காத காமெடியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments