Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலுக்கு முன்னால் அனிருத் கொடுக்க இருக்கும் சர்ப்பிரைஸ்! எப்போது தெரியுமா

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்றால் இளைஞர்கள் மத்தியில் அனிருத் தான். அனைத்து தரப்பு ரசிகர்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதை அவரின் ஹிட்டான பாடல்களை வைத்தே சொல்லிவிடலாம்.

சூர்யாவுடன் முதன் முதலாக தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் பாடல் காட்சிகள் தற்போது ஷூட்டிங் எடுக்கப்பட்டுவருகிறது.

அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களை தொடர்ந்து சூர்யாவுடன் இப்படத்தில் பணியாற்றுகிறார் அனிருத். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் ஒன்றை அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16 ம் தேதி வெளியிடுகிறார்களாம். அந்த பாடல் தற்போது தயார் நிலையில் உள்ளதாம்.

மெர்சல் படத்திற்கு முன்னால் அனிருத் வெளியிடும் சிங்கிள் ட்ராக் இணையதளங்களை கலக்கும் என்ற நம்பிக்கையோடு, அனைத்து ரசிகர்களையும் கவருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments