Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீ இயக்குனர் என்றால் நான் நடிக்கின்றேன், பாலாவே சம்மதித்துவிட்டார்

தமிழ் சினிமாவின் தளத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றவர் பாலா. இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் தாரை தப்பட்டை.

தற்போது இவர் இயக்கத்தில் மிக விரைவில் வெளிவரவிருக்கும் படம் நாச்சியார், இப்படம் வெளியான பிறகு அடுத்து விக்ரம் மகன் துருவா நடிக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் சசிகுமார் ‘அண்ணே நீங்களும் நடிக்க வறீங்களா?’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு பாலா ‘என்ன வில்லன்னா நடிக்கனுமா?’ என்று கேட்க, அதற்கு சசி ‘அப்படி இல்லைன்னே’ என்று கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து பாலா ‘நீ இயக்குனர் என்றால் நான் கண்டிப்பாக நடிக்கின்றேன்’ என்று தெரிவித்தாராம்.