Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலகலப்பு 2 படத்தின் நெக்ஸ்ட் லெவல் மூவ்! லேட்டஸ்ட் அப்டேட்

சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 படம் ஜெய், ஜீவா, பிக்பாஸ் வையாபுரி, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி என பலரின் நடிப்பில் உருவாகி வருகிறது. இம்மாதம் 4 ம் தேதி காரைக்குடியில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

15 நாட்களாக இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் இன்று காசியில் தொடங்கியுள்ளது.

வரும் டிசம்பர் 2ம் வாரம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் இந்தூர், புனே போன்ற பகுதிகளிலும் ஷூட்டிங் எடுக்கப்படவுள்ளது.

படத்தில் ரோபோ சங்கர், ராதா ரவி, விடிவி கணேஷ், சிங்கம் புலி, மனோ பாலா, யோகி பாபு என பலர் காமெடியில் கை கோர்க்கிறார்கள்.