Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆந்திரா-தெலுங்கானாவில் மட்டும் இத்தனை தியேட்டர்களா? மெர்சல் புதிய சாதனை

விஜய்யின் மெர்சல் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அதிரிந்தி என்ற பெயரில் இன்று வெளிவந்துள்ளது. தமிழை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 454 திரையரங்குகளில் அதிரிந்தி வெளியாகியுள்ளது. இதுவரை வந்த விஜய்யின் படங்களில் இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீ இயக்கியுள்ள மெர்சல் படம் ஜிஎஸ்டி வரி பற்றிய சர்ச்சையால் தேசிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அந்த வசனங்களை தெலுங்கு பதிப்பில் மியூட் செய்துவிட்டதால் ஆந்திர ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.