Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியல் தலையீட்டால் சத்தமில்லாமல் பதவியை ராஜினாமா செய்த தலைமை இயக்குனர் - விரிவான தகவல்

சினிமாத்துறையில் அரசியல் தலையீடு இருப்பதை சிலர் அனுபவப்பட்டிருப்பார்கள். மத்திய அமைச்சகத்தின் முடிவால் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தலைமை இயக்குனர் சுஜாய் கோஷ்.

விசயம் என்னவெனில் சர்வதேச திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் கோவாவில் நடைபெறும். இந்தாண்டுக்கான விழா வரும் 20 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிறந்த படத்தை தேர்வு செய்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அனுப்பி வைப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான அக்குழு தேர்வு செய்த சிறந்த படங்களில் எஸ்,துர்கா என்ற மலையாள படத்தையும், நியூடு என்ற மராத்தி படத்தை அமைச்சகம் நீக்கியுள்ளது.

இதனால் அக்குழுவின் தலைமை இயக்குனர் சுஜாய் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபற்றி அவர் சொல்லும் போது நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments