Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வாழ்க்கையின் முக்கிய நாள் இன்று: ஜீ.வி.பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் தற்போது பாலா இயக்கிவரும் நாச்சியார் படத்தில் நடித்துள்ளார். நடிகை ஜோதிகா அதில் போலீசாக லீட் ரோலில் நடிக்க, ஜீ.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் "என் வாழ்க்கையில் முக்கிய நாள் இன்று" என ட்வீட் செய்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். இளையராஜாவின் இசையில் ஒரு டூயட் பாடலை இன்று அவர் பாடியுள்ளார், அதை தான் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

"ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து" என்று தொடங்கும் பாடலைத் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த பாடகி பிரயங்காவுடன் இணைந்து பாடியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.