Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் பிறந்த கதை! AK58 படத்தின் டைட்டில் பின்னணி!

அஜித் நடிப்பில் அவரின் 58 வது படத்தின் டைட்டில் வெளியானது. ரசிகர்களின் நாடித்துடிப்பும் எகிறியது. உலகளவிலும் ட்ரண்டானது. இது பலருக்கும் சர்ப்பிரைஷ்.

படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என ஒவ்வொன்றாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு தீபாவளியை நோக்கியுள்ளது.

அந்த வகையில் அஜித் இயக்குனருடன் சிவாவுடன் தான் அடுத்த படம் என சொன்னதும் சில பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. முதலில் வீரம் 2 என டைட்டில் வைக்கலாம் என்ற முடிவாம்.

ஆனால் அப்பட நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் வீரம் பட விசயத்தால் கிளியரன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டார்களாம். இதனால் வி என்ற ஆரம்பிக்கும்படியாக விசுவாசம் என ஃபைனல் செய்துள்ளார்கள்.

சில எதிர் விமர்சனங்கள் படத்திற்கு இருந்தாலும் அஜித் தயாரிப்பு தரப்பிடம் நான் அடுத்த படத்தை உங்களுக்கே கொடுக்கிறேன். அந்த பிரச்சனைகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினாராம்.

குறைகளை பொருட்படுத்தாமல் அவர் மீண்டும் வாய்ப்பு கொடுத்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்ததாம்.