Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம் 2 படத்திற்கு வந்த சிக்கல்! கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு

நாட்டில் இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது எங்கே போனார் இந்த கமல் என்பதே பலரின் எண்ணம். ஏனெனில் அவர் ட்விட்டரில் சமீபகாலமாக போட்ட பதிவுகள் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தின.

அரசியல் வாதிகள் கூட இதை சர்ச்சையாக்கினார்கள். தற்போது அவர் விஸ்வரூபம் 2 படத்தின் இறுதி கட்ட தயாரிப்பு பணிகளில் இருக்கிறார். இதனால் சில நாட்களாக அவரிடம் இருந்து எந்த தகவல்களும் இல்லை.

விஸ்வரூபம் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவி. இவருக்கும் கமலுக்கும் இடையே பண விசயத்தில் கருத்து வேறுபாடு. இதனால் விஸ்வரூபம் 2 படம் சில நாட்களுக்கு முன்பு வரை கிடப்பில் இருந்தது.

எனவே கமல் ரவி கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு தான் விஸ்வரூபம் 2 வேலைகளை ஆரம்பித்தாராம். ஆனால் ரவி இப்படத்தை விட்டுகொடுக்க முடியாது என வாதம் செய்தாராம்.

இதனால் கமல் இப்படத்தின் டைட்டிலில் தயாரிப்பு கமல் சந்திரஹாசன் என முடிவு செய்துவிட்டாராம். இதனால் சில சிக்கல்கள் வரலாம் என பேசப்படுகிறது.

இம்மாத இறுதியில் அவர் இந்தியா திரும்புகிறாராம்.

2017 ல் சினிமாவில் உங்கள் விருப்பமான நடிகர், நடிகை, காமெடியன் யார்? வாக்களிக்க கிளிக் செய்யவும்