Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா என்னானது? அப்டேட்ஸ் இதோ

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த 2016 ல் ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் இப்படம் முடியவில்லை. நீண்டநாளாக இப்படம் அப்படியே இருக்கிறது என்பது ரசிகர்களின் கவலை.

தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை மீண்டும் பொள்ளாச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

ஏற்கனவே ஷூட்டிங் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் ஸ்டூடியோஸில் எடுக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்திலிருந்து விசிறி பாடலை படக்குழு இணையதளத்தில் வெளியிட்டது.