Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோக்கர் பட ஹீரோவா இப்படி? படக்குழுவை அதிரவைத்த சம்பவம்

ஜோக்கர் படத்தை நாம் இன்றைய அரசியல் கால கட்டத்தில் மறக்க முடியாது. நடக்கும் அக்கிரமங்களுக்கு அன்றே சாட்டையடி கொடுத்தது போல இப்படம் அமைந்தது.

இதில் நடித்த ஹீரோ குரு சோமசுந்தரம் மிகுந்த அளவில் பேசப்பட்டார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறித்த நேரத்தில் வெளியிடுவதை தடுக்க அரசியல் சூழ்ச்சியும் நடந்தது.

தற்போது இப்படத்தின் ஹீரோ வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஒரு கேங்ஸ்டர் லீடராகவும், கொடூர வில்லனாகவும் நடித்துள்ளாராம்.

காதல், கேங்ஸ்டர், திரில்லர் என மூன்றும் கலந்த கலவையாக படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் விநாயக். இவர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ஹாலிவுட் பட ஒளிப்பதிவாளர் ராட்ரிகோ இதில் பணியாற்றுகிறாராம். படத்தில் 6 நிமிடங்கள் கொண்ட காட்சியை ஒரே டேக்கில் நடித்துவிட்டாராம் குரு.

இதை எதிர்பாராத படக்குழு அவரின் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட அவருக்காகவே கதை சில மாற்றங்கள் செய்து படத்தை எடுத்திருக்கிறார்களாம். இது தமிழ் சினிமாவில் நல்ல படமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

Comments