உங்களுக்கு இதயம் இருக்கா? தமிழ்ராக்கர்ஸ் டீமிடம் வேண்டுகோள் வைத்த விக்னேஷ் சிவன்
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் மற்றும் குலேபகாவலி ஆகிய படங்கள் இன்று திரைக்கு வந்துள்ளன.
வழக்கமாக திரைக்கு வரும் அதே நாளில் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் சட்ட விரோதமாக தியேட்டரில் பதிவு செய்யப்பட்ட முழு படமும் வெளியிட்டுவிடுவார்கள். அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் அந்த இணையத்தளத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம் மட்டும் தற்போது திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அது பற்றி கோபமாக பதிவிட்டுள்ளார். "தமிழ்ராக்கர்ஸ் டீம்! ப்ளீஸ்.. ! உங்களுக்கு இதயம் இருந்தால்.. தயவுசெய்து பயன்படுத்துங்கள்..! இந்த நாளுக்காக தான் நாங்கள் உழைத்துள்ளோம்! வரி பிரச்சனை, சினிமா துறையில் உள்ள பல பிரச்சனைகளை தாண்டி இன்று ரிலீஸ் செய்துள்ளோம்" என கூறியுள்ளார்.
Tamil rockers team ! PleAse ! If you have a heart ! Please Use it 🙏🏻😢😢😢🙏🏻🙏🏻🙏🏻
— Vignesh ShivN (@VigneshShivN) January 12, 2018
We have worked hard for his day!
Amidst all the tax issues , industry issues a lot has gone into releasing all these films !
Please don't do this to us #TSK #Sketch #Gulebagavali 🙏🏻