Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த ஒரு விசயத்துக்காக பத்மாவத் பட தியேட்டரில் மொத்த குடும்பமும் செய்த வேலை! வைரலாகும் வீடியோ

பத்மாவத் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட படம் என்ற சாதனையை அண்மையில் செய்தது. பல சர்ச்சைகளுக்கிடையில் பதட்டமான சூழ்நிலையில் இப்படம் வெளியாகி வசூல் எடுத்துக்கொண்டிருக்கிறது.

நல்லவிதமான விமர்சனங்கள் கருத்துகள் என இருப்பினும் இப்படத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது Ghoomer பாடல் தான். தீபிகா படுகோன், ரன்வீர் ஜோடி நடிக்க படத்தின் காட்சிகள் படத்திற்கு பக்க பலம்.

இந்நிலையில் Ghoomer பாடலை இணையதளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 105 மில்லியனை தாண்டியுள்ளது. ஸ்ரேயா கோஷல், ஸ்வரூப் கான் ஆகியோர் பாட பன்சாலி இயக்கி இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே பாலிவுட்டில் இதுவரை 300 மில்லியன் பார்வைகளை பெற்ற பாடல்கள் இருக்கையில் தற்போது Ghoomer 100 மில்லியன் லிஸ்டில் ஒன்றாக வந்துள்ளது. Befikre படத்தின் Nashe Si Chadh Gayi பாடல் 375 மில்லியன் பார்வைகள் பெற்று உச்சத்தில் இருக்கிறது.

பத்மாவத் வம்சத்தை சேர்ந்த சமூகத்தினர் சிலர் இன்னும் எதிர்ப்பு காட்டி வரும் நிலையில் அமெரிக்காவில் சான் ஃபிரான்ஸிஸ்கோவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த வட இந்திய சமூகத்தினர் படத்துக்கான மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கியதோடு பெண்கள் பத்மாவத் ராணி போல உடையணிந்து ஒன்றாக Ghoomer பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

இதன் வீடியோ

Comments