Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு தென்னிந்திய படத்தின் வசூல் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய எம்பி

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த பாகுபலி உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வசூல் சாதனை செய்திருந்தது. இரண்டு பகுதிகளில் சேர்த்து 2300 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது பாகுபலி.

இது பற்றி இன்று பாராளுமன்றத்தில் பேசிய தெலுங்கு தேசம் எம்பி ஜெயதேவ கல்லா, "பாகுபலி படத்தின் வசூலை விட ஆந்திராவிற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி குறைவாக உள்ளது" என கூறினார்.

ஆந்திராவை இரண்டாக பிரித்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.