Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி! எத்தனை கோடி தெரியுமா?

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் கங்கானாவுக்கு தோழியாக கூட்டத்தோடு கூட்டமாக நடித்த சாய் பல்லவி, பின்னாளில் பிரேமம் டீச்சர் ரோலில் நடித்ததால் இந்திய அளவில் பிரபலானார்.

அதன் பிறகு தெலுங்கு, தமிழ் என பிஸியாக நடித்து வரும் அவரது சம்பளம் தற்போது கோடி கணக்கில் தான்.

அடுத்து தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். அதற்காக சாய்பல்லவி 1.5 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறார்.

முன்னணி நடிகைகளான நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா, காஜல் போன்றவர்கள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்கி வந்த நிலையில் சாய் பல்லவியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

தனுஷின் மாரி-2, கரு போன்ற தமிழ் படங்களிலும் அவர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Comments