Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போய், அதற்கு பதிலாக காலா படம் திரைக்கு வரவுள்ளது.

திடீரென இப்படி அறிவித்ததால் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 2.0 வந்தால் அதற்கு போட்டியாக ஒரு பெரிய ஹீரோவின் படம் வெளியாகலாம் என முதலில் கூறப்பட்டது.

மகேஷ் பாபுவின் பாரத் அனே நேனு மற்றும் அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா ஆகிய படங்களில் எதாவது ஒன்றை வெளியிட விநியோகஸ்தர்கள் திட்டமிட்டிருந்தனர்.

தற்போது 2.0 பதிலாக காலா படம் வருவதால் இரண்டு படங்களையும் அதற்கு போட்டியாக களமிறக்க திட்டமிட்டுள்ளனர். ரஜினிக்கு தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றாலும் 2.0 படம் அளவிற்கு காலா படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை. அதனால் தைரியமாக இரண்டு பெரிய படங்களை போட்டிக்கு களமிறக்கவுள்ளனர்.

அதே நேரத்தில் தமிழில் கார்த்திக்-கவுதம் கார்த்திக் நடிப்பில் 27 ஏப்ரலில் வரவிருந்த Mr.சந்திரமௌலி படம் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.