Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி பிரபாஸ் உடன் ரொமான்ஸ் செய்யப்போவது இவர் தானாம்!

பாகுபலி படத்தின் மூலம் மக்களின் மனம் நின்ற கதாநாயகனாக இடம் பிடித்தவர் பிரபாஸ். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான இவரின் நடிப்பில் அடுத்து வெளியாக இருப்பது சஹோ படம்.

இதனை தொடர்ந்து அவர் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. வரும் 2019ல் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

அதோடு இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். பாலிவுட் நடிகையான இவர் தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.