Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் மகன் நடிக்கும் வர்மா படம் பற்றி வெளியான உண்மை தகவல்!

தெலுங்கில் வெளியாகி மக்கள் அனைவரையும் கவர்ந்த படம் அர்ஜூன் ரெட்டி. இதில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டாவும், ஹீரோயினாக நடிகை ஷாலினி பாண்டே நடிக்க சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை தமிழில் வர்மா என இயக்குனர் பாலா இயக்குகிறார். இதில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில் அவருக்கு ஜோடியாக கௌதமியின் மகள் நடிப்பதாக தகவல் பரவியது.

தற்போது நடிகை கௌதமி அதை மறுத்துள்ளார். ட்விட்டரில் அவர், எனது மகள் சுப்புலட்சுமி, சினிமாவில் அறிமுகமாவதாக வந்த செய்திகள் உண்மை இல்லை. அவளது மேற்படிப்பில் பிசியாகிவிட்டார்.

எனவே தற்போது படங்களில் நடிக்கவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி என கௌதமி பதிவிட்டுள்ளார்.