Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்தியின் படத்தில் இணைந்த பிரபல மூத்த நடிகர்

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு கார்த்தியோடு இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் ராகுல் ப்ரீத். இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் பூஜை சில வாரங்கள் முன்பு சூர்யாவால் துவங்கிவைக்கப்பட்டது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார்.

கடைசியாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்த கார்த்திக், தற்போது அவரது தம்பியின் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், RJ விக்னேஷ் உள்ளிட்ட மேலும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.