Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்ராக்கர்ஸை எதுவும் பண்ண முடியாது, யாரும் குடும்பத்தோடு வராதீங்க - இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது தமிழ்ராக்கர்ஸ். படம் திரையரங்குகளில் வெளிவரும் அன்றே அந்த இணையதளத்திலும் சட்டவிரோதமாக வெளியிட்டுவிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்ராக்கர்ஸ் பற்றி ஒரு பேட்டியில் பேசிய இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ், "தமிழ் ராக்கர்ஸ் பெரிய இடத்தில் உள்ளது. அவர்களை மிரட்டும் அளவுக்கு எதையும் செய்ய முடியவில்லை. கடுமையான உழைப்பை போட்டு ஒரு படத்தை எடுக்கிறோம், அவர்கள் மனது வைத்தால் தான் சினிமா துறையில் உள்ள நாங்கள் வாழ முடியும்" என கூறியுள்ளார்.

மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் 18+ காக மட்டுமே எடுக்கப்பட்ட படம், தயவுசெய்து யாரும் குடும்பத்தோடு வரவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.