Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசன் தான் தேர்வானார்.

பின்னர் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக தோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை திஷா பதானியை படக்குழு தேர்வு செய்தது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள திஷா,

"நான் யாருக்கு பதிலாகவும் நடிக்கவில்லை. அவர் வெளியேறினார் - அதற்கான காரணத்தை கூட நான் கேட்கவில்லை. ஸ்ருதி ஹாசன் மூத்த நடிகை, நான் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். அவருக்கு பதிலாக நடிப்பது என்பது கஷ்டம். எதனால் அவர் வெளியேறினார் என நீங்கள் இயக்குனரிடம் தான் கேட்கவேண்டும்"

என கூறியுள்ளார்.