Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு காலா படத்தை ஒப்புக்கொண்டேன்: பிரபல பாலிவுட் நடிகர்

சூப்பர்ஸ்டார் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. அதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகை ஹுமா குரேஷி, நானா படேகர், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி பேட்டியளித்துள்ள பங்கஜ் திரிபாதி, "ரஜினியை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்ற ஒரே காரணத்தால் தான் நான் காலா படத்தில் நடிக்க சம்மதித்தேன். முதல் நாள் ஷூட்டிங்கின் போது ரஜினியை நான் 15 நிமிடங்கள் தொடர்ந்து பார்த்து கொண்டிருந்தேன்" என கூறியுள்ளார்.

பங்கஜ் காலா படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments