Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்பட்ட தனுஷ் பட நடிகை! துயர சம்பவம்

தமிழ் சினிமாவுக்கு வந்ததும் சில நாட்களில் நன்கு அறியப்பட்டவர் நடிகை மேகா ஆகாஷ். தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ஹீரோயின் அவர் தான்.

படப்பிடிப்புக்காக துருக்கி சென்றிருந்திருக்கிறார். அங்கு தனக்கு நடந்த சிக்கலான சூழ்நிலை பற்றி பத்திரிக்கைக்கு முழு பேட்டி கொடுத்துள்ளார். விமானத்தை விட்டு இறங்கியதும் அவருக்கு கடுமையான பசியாம்.

கடைகளுக்கு போனால் எதுவுமே தெரிந்த மாதிரி இல்லையாம். மெனு லிஸ்ட் கூட துருக்கி மொழியில் இருந்திருக்கிறது. ரைஸ் ஆர்டர் செய்து ருசி பிடிக்காமல் சாப்பிடாமல் விட்டுவிட்டாராம்.

பிறகு ஜீஸ் குடித்து பசி எப்படியோ தாங்கியிருக்கிறார். துருக்கியில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறார்.ஆனால் ரூம் உதவியாளர்களுக்கு மொழி பிரச்சனையால் மேகா பேசிய ஆங்கிலம் தெரியவில்லையாம்.

அவர்கள் பேசும் துருக்கி மொழி இவருக்கு புரியவில்லை. நினைத்த நேரத்தில் சுடுதண்ணீர் கூட கேட்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். பின் படக்குழுவினர் தான் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார்கள்.

துருக்கி நாட்டில் தனக்கு நடந்த துயரத்தை மறக்கு முடியாது என கூறியிருக்கிறார்.