Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீ பற்றி வந்த செய்தி வெறும் வதந்தியா? புதிய தகவல்

தளபதி விஜய்யை வைத்து தொடர்ந்து இரண்டு பிரம்மாண்ட படங்கள் இயக்கிய அட்லீ அடுத்து தெலுங்கில் ஒரு படம் இயக்குவதாக கூறியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

அட்லீ ஒரு கல்லூரி விழாவில் ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோவுடன் தன் அடுத்த படம் இருக்கும் என அட்லீ கூறினார் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது சில பத்திரிகையாளர்கள் அட்லீயை தொடர்புகொண்டு பேசியபோது அட்லீ தன் அடுத்த படம் இன்னும் உறுதியாகவில்லை என கூறியுள்ளார்.

அதனால் அட்லீயின் அடுத்த படம் யாருடன் என்பது மீண்டும் பெரிய சஸ்பென்ஸாக மாறியுள்ளது.