Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயின் அடுத்த படத்தில் விஜய் பட ஸ்பெஷல்!

விஜய் நடித்த தெறி, மெர்சல் என ஹிட்டான படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. மெர்சல் படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலில் ரூ 250 கோடியை அள்ளியது.

அட்லீயின் அடுத்த படம் என்ன என ரசிகர்கள் மத்தியில் சில எதிர்பார்ப்பு இருந்தது. அண்மையில் அவர் அடுத்ததாக தெலுங்கு படத்தை தான் எடுக்கப்போவதாக தகவல் வெளியானது.

ஆனால் அவரே அதை ஒரு விழாவில் கலந்துகொண்ட போது மறுத்திருந்தார். தன் அடுத்த படம் தமிழில் தான் என கூறியிருந்தார். அதோடு தெலுங்கில் நான் படம் எடுக்கவில்லை என சொல்லிவிட்டார்.

இந்நிலையில் இப்படத்தில் மெர்சல், தெறி ஆகிய படங்களில் ஸ்கிரிப்ட் வேலைகளில் பணியாற்றிய ரமணகிரிவாசன் என்பவர் இணைந்துள்ளாராம். இவர் முன்னணி சானல் ஒன்றில் பணியாற்றி வருபவர்.

கனா காணும் காலங்கள், மதுரை, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் என சீரியல்களுக்கு கதை எழுதியுள்ளாராம். அவருக்கு விரைவில் படம் இயக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.