Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோயினாக மாறிய சீரியல் நடிகை இப்போது பிரபல நடிகருக்கு ஜோடியாகிறாராம்!

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அதற்கு முன்பே இவர் முன்னணி செய்தி சானலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

பின் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக மாற அவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து அவருக்கு இப்போது பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

இப்போது அவர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் உதயநிதியுடன் ஜோடியாக நடித்து வருகிறார். அதோடு கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி படத்திலும் அவர் தான் ஜோடியாகிறாராம்.

இனி அடுத்ததாக ஒரு நாள் கூத்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் புதிய படத்தில் பிரியா கமிட்டாகியிருக்கிறார். இதில் பிரபல நடிகரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறாராம்.